கிருஷ்ணகிரியில் துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சிப்காட் தொழில்பூங்காவில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர், தனியார் துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிதுநேரத்தில், ஒருவர் பின் ஒருவராக, 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதையடுத்து, அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்குப் பதிவுசெய்த போலீசார், துரித உணவக உரிமையாளரான சென்னப்பனை கைது செய்து, விசாரணை மேற்கொண்ட பின் ஜாமினில் விடுவித்தனர்.
மேலும், அவரது உணவகத்தில் இருந்த இறைச்சிகளைக் கைப்பற்றிய உணவுத்துறை அதிகாரிகள், சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.