கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளியில் உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த , 70 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பு வாள் மற்றும் 50 சென்டிமீட்டர் உயரமுள்ள மண்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்த முடிவுகள் வந்த பிறகு தான் இதன் காலத்தை கணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி தொடரும் என்றும் வரும் காலங்களில் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








