ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 25 பேர் கைது!!!

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்தில் உள்ள பிஞ்சதும்மல வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த 20…

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்தில் உள்ள பிஞ்சதும்மல வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், சித்தூர் மாவட்டம் பீலேர் அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழர்கள் ஐந்து பேரை மடக்கி பிடித்த போலீசார், 19 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகளின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என செம்மர கடத்த தடுப்பு பிரிவு எஸ்பி முரளிதர் கூறினார்.

மேலும் தப்பியோடிய நபர்களை தேடி வருவதாகவும் அதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.