தமிழ்நாட்டில் 25% பரவிய பிஏ5 வகை கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், பிஏ5 தொற்று வகை 25% வரை பரவி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24…

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், பிஏ5 தொற்று வகை 25% வரை பரவி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 34,62,297 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 322 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 34,19,905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 38,026 பேர் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சமீப நாட்களாக தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மெள்ள பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

அதேபோல அதிகரித்துவரும் பிஏ5 தொற்று வகை பாதிப்பை தடுக்க மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே பிஏ5 வகை கொரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில்தான் தொற்று பாதிப்பு அதிகம் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.