முக்கியச் செய்திகள்

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை: சுகாதாரத் துறை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான தகவல் போலியானது என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெறும் என்றும், கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் அதிகாரப்பூர்வ தளமான netboard.edu.in என்ற இணையதளதில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல் வெளியானது. அந்தக் கடிதத்தில் 2022 மே 2-இல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வானது ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான கடிதம் போலியானது என்று சுகாதரத் துறை விளக்கமளித்துள்ளது.

மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

கேரளப் பெண் புகார்: சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

Halley Karthik

நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!

விஷாலின் வீரமே வாகை சூடும்: வெளியீடு எப்போது?

Arivazhagan CM