சென்னையில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது. பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கள் நடைபெற உள்ளது. இதற்காக செஸ் ஒலிம்பியாட் தீபத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் இதற்கான இலச்சினையையும் அறிமுகப்படுத்தப்பட்டது. செஸ் விளையாட்டில் இருக்கும் நைட் போல ஒரு குதிரை வேஷ்டி, சட்டை அணிந்து இருப்பது போன்ற வடிவத்தை தமிழ்நாடு அரசு வடிவமைத்து வெளியிட்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடக்கி வைக்கிறார்.
@CMOTamilnadu @chennaichess22 pic.twitter.com/z295igmkYu
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் இசையில் டீசர் ஒன்று தயாரிக்கப்பட்டது. அதனை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்.
44வது செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் அதிலும் நம் தமிழ்நாட்டில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. இந்த போட்டியினை வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்கள். போட்டி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.