2025 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2025 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானியர் உட்பட மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விருதுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி, முதல் நாளான இன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு இந்தாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.