ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு; தன்னை சிக்க வைத்துவிட்டதாக நடிகை ஜாக்குலின் குற்றச்சாட்டு

சுகேஷிடம் இருந்து பரிசுப் பொருட்களை நான் மட்டும் வாங்கவில்லை என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டார்…

சுகேஷிடம் இருந்து பரிசுப் பொருட்களை நான் மட்டும் வாங்கவில்லை என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். சுகேஷின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகை ஜாக்குலின், அவரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத்தில் அமலாக்கத் துறை இந்த வழக்கில் துணை குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருந்தது, அதில் ஜாக்குலின் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜாக்குலின் தாக்கல் செய்த பதில் அறிக்கையில் கூறியதாவது, ”நான் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். சுகேஷின் வலையில் சிக்கி கொண்டு பாதிக்கப்பட்ட என்னை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவளாக பார்க்க மறுக்கின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாக இருக்கின்றது. நான் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டதை விசாரணை அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர்.

இது தவறான வழக்கு என்றும் கூறியுள்ளார். சுகேஷிடம் பரிசுப் பொருட்களை நான் மட்டும் வாங்கவில்லை, நடிகை நூரா பதேஹி உள்ளிட்ட பல பிரபலங்களும் வாங்கினார். அவர்களும் இந்த வழக்கில் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் நான் மட்டும் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறேன். இது விசாரணை அதிகாரிகளின் தவறான உள்நோக்கம் கொண்ட , பாரபட்சமான அணுகுமுறை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமலாக்கத்துறை பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கும் வைப்புத் தொகை, சுகேஷ் அறிமுகத்துக்கு முன்பே முதலீடு செய்யப்பட்டது என்றும், அவை தனது உழைப்பில் சம்பாதித்தவை என்றும் நடிகை ஜாக்குலின் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.