மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா வார விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த
2 இயற்கை விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் பிரதமருடன்
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளனர். மத்திய அரசின் டிஜிட்டல் இந்திய வார விழா ஜூலை 1ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற உள்ள டிஜிட்டல் வார விழாவில் விவசாயிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் நாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயற்கையான முறையில் சாகுபடி செய்த சோளம், கம்பு, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட விதைகளை ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு 10 டன் விதை விநியோகம் செய்து முன்னேற்றத் துடிக்கும் இயற்கை விவசாயிகள் ராமர், முத்துராமலிங்கம் ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் தேர்வு செய்துள்ளார்.
“டிஜிட்டல் இந்தியா” வார விழாவில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய
மாவட்டங்களில் மொத்தம் நான்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விவசாயிகள் ஜூலை 1ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் பிரதமர்
நரேந்திர மோடி பங்கேற்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
பங்கேற்க உள்ளனர்.

இந்த விவசாயிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில்
சந்தித்து வாழ்த்தி அனுப்பினார். பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது என ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-மணிகண்டன்








