ராமநாதபுரத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுங்கத் தடுப்புப் பிரிவு, ராமநாதபுரம், திருச்சி சுங்க (தடுப்பு) கமிஷனர் அலுவலகம், ஒரு மீன்பிடி படகை மறித்து, 2.5 கிலோ வெளிநாட்டு தங்கத்தை பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து கடந்த 5ஆம் தேதி அன்று மீன்பிடி படகு மூலம் ராமநாதபுரம் நொச்சியூரணி கடற்கரை வழியாக வெளிநாட்டு தங்கம் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் சுங்கத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சிறப்பு புலனாய்வு தகவல் கிடைத்தது. அதன்படி, முயல் தீவு அருகே தென் கடலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பிரதேச தடுப்பு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகை அடையாளம் கண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகாரிகள் படகை மறிக்க முயன்றும் , கடத்தல்காரர்கள் நிறுத்தாமல் படகை நொச்சியூரணி கடற்கரைக்கு ஓட்டிச் சென்றனர். பாறையில் மோதிய பின் கரையில் இறங்கினர். படகை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த படகை அதிகாரிகள் சோதனை செய்ததில், மொத்தம் 2.5 கிலோ எடையுள்ள கனசதுர வடிவிலான 4 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தங்கம் கடத்த பயன்படுத்திய படகையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா