நாட்டிலேயே முதல் முறையாக #kerala-வில் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி | பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை!

குரங்கு அம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரளா, மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு தாக்கியுள்ளது. குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.…

குரங்கு அம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரளா, மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு தாக்கியுள்ளது.

குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், குரங்கு காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC – Public Health Emergency of International Concern) அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையி, ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து சமீபத்தில் வந்த அவர், கேரளாவின் எடவன்னா பகுதியை சேர்ந்தவர். உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததிலிருந்து இந்தியாவில் 30 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் 29 பேரும், 2பி எனப்படும் லேசான பாதிப்பு கொண்ட வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர் ஒருவர் மட்டுமே கடுமையான பாதிப்பு கொண்ட 1பி வைரஸ் பாதிப்பு கொண்டவர் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.