தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களை அனைவரையும், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவித பயனும் இல்லை. ஆனாலும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசும், மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் 19 பேரை கைது செய்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.







