மதுரை அழகர்கோவில் 18-ம் அடி கருப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்த 250 கிலோ எடையில் 18 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அரிவாள் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாசேத்தி, பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட
அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாயிகளுக்கு தேவையான கோடாரி, கதிர் அரிவாள், மண்வெட்டி வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள் மேலும் இறைச்சி வெட்ட பயன்படுத்தபடும் கத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தவிர பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அருவாள் 2
அடியில் இருந்து 27அடிவரை நேர்த்திக் கடனுக்காக அரிவாள் செய்து தயாரித்தும்
கொடுத்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நேர்த்திக்கடனுக்காக மதுரை அழகர் கோவில்
உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 250 கிலோ எடை கொண்ட 18 அடி ராட்சத
அரிவாள் தயாரிப்பதற்காக திருப்புவனம் பட்டறையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.
அதன்படி இங்குள்ள பட்டறையில் தொழிலாளர்கள் சுமார் 20 நாட்களுக்கு மேலாக
250கிலோ கொண்ட 18 அடி ராட்சத அருவா செய்து வருகின்றனர்.