முக்கியச் செய்திகள் தமிழகம்

தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18
ஆம் ஆண்டு துவங்குகிறது.

தேமுதிக கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்கும் விழாவில் தேமுதிக கட்சியின் பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவக்க விழா. 2005 ஆம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய அரசியல் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கட்சி அறிவித்த நாள் இன்று. இக்கட்சி மக்களுக்கு உதவும் நல்ல நோக்கத்திற்காகத் துவங்கப்பட்டதாகும்.விழுப்புரம் மாவட்டத்தில் விஜயகாந்த் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள், கட்சியின் 18 ஆம் ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும்  முப்பெரும் விழா நடக்க உள்ளது. 18 ஆம் தேதி தாம்பரத்திலும் அடுத்து கன்னியாகுமரியில் இந்த விழா நடக்க உள்ளது.
திமுக ,அதிமுக உள்ளிட்ட மாபெரும் இயக்கங்கள், தலைவர்கள் இருந்த போதே
மக்களுக்காக, நல்ல இலட்சியத்திற்காக வறுமை இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் முதன்மை மாநிலமாக, லஞ்ச ஊழல் இல்லாமல் உருவாக்க வேண்டும்
என்பதற்காகத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த கட்சி. திமுக அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகள் தான் அங்கீகரிக்கப்பட்டது. 2024 தேர்தலுக்குத் தயாராக உள்ளதா ?உட்கட்சி தேர்தல் தற்போது நடந்து வருகிறது அது முடிந்ததுடன்.  செயற்குழுக், பொதுக்குழு கூட்டங்கள் , மக்கள் பிரச்சனைகளையும் பற்றி சிந்தித்துச் செயல்படுவோம், எங்கள் கட்சி வளர்ச்சி பற்றிதான் தற்போது சிந்தித்துச் செயல்படுகிறோம். கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை வெகு விரைவில் அறிவிப்புகள் வரும் எனத்தெரிவித்தார்.
.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக அலுவலக விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

G SaravanaKumar

GeM இணையதளத்தில் 40 லட்சம் விற்பனையாளர்கள்: பிரதமர் மோடி

EZHILARASAN D

சென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசி

EZHILARASAN D