நடந்து முடிந்த நீட் தேர்வில் 162 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், ஆகிய 4
பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும் ஒவ்வொரு பாடத்திலிருந்து 50
கேள்விகள் என்கிற அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுள்
மாணவர்கள் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 20 கேள்விகளை சாய்சில்
விடலாம் அந்த வகையில் தமிழக பாடத்திட்டத்திலிருந்து 162 கேள்விகள்
கேட்கப்பட்டுள்ளது. 38 கேள்விகள் NCERT பாடப்புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேதியியல் பாடத்தில் மொத்தம் ஐம்பது கேள்விகளில் 40 கேள்விகள் மாநில
பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன மீதமுள்ள 10 கேள்விகள் என்சிஆர்டி
பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் ஐந்து கேள்விகளை
சாய்ஸில் விடலாம் என்கிற அடிப்படையில் மாநில பாடத்திட்டத்திலிருந்து 45
கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்திருக்க முடியும்.
இயற்பியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 48 கேள்விகள் மாநில
பாடத்திட்டத்திலிருந்தும் 2 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்தில் இருந்தும்
இடம் பெற்றுள்ளது.
தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் மொத்தம் 74 கேள்விகள் மாநில
பாடத்திட்டத்தில் இருந்தும் 26 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்தும்
கேட்கப்பட்டுள்ளது
இந்த வகையில் நீட் நுழைவுத் தேர்வில் 162 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில்
இருந்து இடம்பெற்றுள்ளது என்று மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.