முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 15ஆயிரம் டன் அரிசி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் தமிழக அரசு சார்பில் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக
அரசு சார்பில் 15 ஆயிரம் டன் அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்துப் பொருட்கள்
கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள
மக்களுக்கு உதவும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி
மதிப்பிலான மருந்துப் பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால்
பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி
வைக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி கடந்த மாதம் முதல்வர்
மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இன்று கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
ஆகியோர் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைக்கின்றனர்.

மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல்
மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி; கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

Arivazhagan CM

பணமோசடி வழக்கு: பிரபல நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Halley Karthik

சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்

Halley Karthik