புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் 43 பேரில், 15 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமைச்சரவையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்தார். இதையொட்டி அவர் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்கு வசதியாக சில மத்திய அமைச்சர்கள் இன்று திடீரென தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், 43 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில் புதிதாகப் பதவியேற்றவர்களில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில், நாரயண் ராணே (மகாராஷ்டிரா), சர்பானந்தா சோனாவால் (அசாம்), வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), ஜோதிராத்ய சிந்தியா (மத்தியபிரதேசம்), ராமச்சந்திர பிரசாத் சிங் (பீகார்), அஸ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), பசுபதி குமார் பாரஸ் (பீகார்), கிரண் ரிஜிஜூ (அருணாச்சலபிரதேசம்), ராஜ்குமார் சிங் (பீகார்), ஹர்தீப் சிங் புரி (டெல்லி), மன்சுக் மண்டவியா (குஜராத்) பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்), பர்சோத்தம் ருபாலா (குஜராத்), கிஷண் ரெட்டி (தெலங்கானா), அனுராக் சிங் தாகூர் (இமாச்சலப்பிரதேசம்) ஆகியோர் கேபினட் அமைச்சர்கள்.
துணை அமைச்சர்:
தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் உட்பட 28 பேருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்: பங்கஜ் சவுத்ரி (உத்தரபிரதேசம்),
அனுப்பிரியா படேல் (உத்தரபிரதேசம்), சத்யபால் சிங் (உத்தரபிரதேசம்), ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), ஷோபனா கரண்டா (கர்நாடகா), பானுபிரதாப் சிங் வர்மா (உத்தரபிரதேசம்), தர்ஷன் விக்ரம் ஜர்தோஷ் (குஜராத்), மீனாட்சி லேகி
(டெல்லி), அன்னபூர்ணா தேவி (ஜார்கண்ட்), ஏ.நாராயணசாமி (கர்நாடகா), கவுசல் கிஷோர் (உத்தரபிரதேசம்), அஜய் பட் (உத்தரகாண்ட்), பி.எல் வர்மா (உத்தரபிரதேசம்), அஜய்குமார் (உத்தரபிரதேசம்), சவுகான் தேவுசிங் (குஜராத்), பகவந்த் குபா (கர்நாடகா), கபில் மோரேஸ்வர் பட்டீல் (மகாராஷ்டிரா), 33. சுஷ்ரி பிரதிமா பவுமிக் (திரிபுரா), சுபாஸ் சர்கார் (மேற்கு வங்கம்), பகவத் கிருஷ்ணராவ் காரத் (மகாராஷ்ட்ரா), ராஜ்குமார் ரஞ்சன் (மணிப்பூர்), பாரதி பிரவீன் பவார் (மகாராஷ்டிரா), பிஸ்வேஷ்வர் துடு (ஒடிசா), சாந்தனு தாகூர் (மேற்குவங்கம்), முஞ்சப்பாரா மகேந்திரபாபு (குஜராத்), ஜான் பார்லா, (மேற்குவங்கம்) எல்.முருகன் (தமிழ்நாடு), நிஷித் பரமானிக் (மேற்கு வங்கம்).
……………







