29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் Health

ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழப்பு; நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்…

நாமக்கல்லில் ஐவின்ஸ் என்ற உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷவர்மா, பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு இன்று அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 6 மாணவிகள், 8 மாணவர்கள் என 14 பேர் மொத்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி (14) என்ற சிறுமி குடும்பத்தாருடன் நேற்று முந்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), தாய் சுஜாதா, உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, உணவக உரிமையாளர் நவீன் குமாரை நாமக்கல் போலீசார் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். உணவகத்தில் கடந்த சனிக்கிழமை சாப்பிட்டவர்களின் விபரங்கள், மருத்துவமனையில் வேறு யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என மாவட்ட ஆட்சியர் உமா சுகாதாரத்துறையினருக்கு விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும்,  பிரச்சினைக்கூறிய உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைக்கப்பட்டுள்ள்ன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram