திருநெல்வேலி அருகே வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 13 பேர் காயம்!

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில்…

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜபாளையத்திற்கு இன்று காலை புறப்பட்டனர். அந்த வேன் ராமையன்பட்டி அருகே திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை கடந்து சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் மும்தாஜ் (33), அப்துல்லா ஷேக்(30), மீரான் (8), பீர் பாத்தி (60), பீர் மைதீன் (59), மைதீன் அப்துல் காதர் (63), முகமது ரியாஸ் (2), அகமது அஜ்மல் (2), கோதை (3), நூர்ஜகான் பீவி (85) உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.  மேலும் அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.