முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு?

அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தேமுதிக இடையேயான தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அவரை தேமுதிக செயலாளர் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

இதை தொடர்ந்து அருகில் உள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்ற எல்.கே.சுதீஷ், அவரையும் நேரில் சந்தித்து பேசினார். 10 நிமிடங்கள் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த பேச்சுவார்த்தையின் போது அதிமுக கூட்டணியில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும், என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

“சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!

Karthick

“திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” : டி.ராஜா

Karthick