31.4 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை மாநில பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும். அதன்படி, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை வெளியாக உள்ளது.

நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading