தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை ஆட்டிபடைத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 74 ஆண்கள், 54 பெண்கள் உள்பட மொத்தம் 128 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 33 பேர் உள்பட 28 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 1,309 பேர் சிகிச்சையில் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டு கொண்டுள்ளது.