பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியானது.
இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in & www.dge.tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ள
இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது.







