மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் முதல் டீஸர் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் மூலம் ‘லியோனார்டோ டிகாப்ரியோ’ மற்றும் ’ராபர்ட் டி நிரோ’ 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 1920 களில் அமெரிக்காவில் நடைபெரும் தொடர் கொலை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெஸ்ஸி பிளெமன்ஸ் மற்றும் லில்லி கிளாட்ஸ்டோன் ஆகியோர் நடித்துள்ளனர். 
இந்த படம் நாளை (மே 20 ) 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக திரையார்வளர்கள் மத்தியில் திரையிடப்பட்டவுள்ளது. மேலும் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் திரையிடப்படும் என தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. கேன்ஸ் பிரீமியருக்கு முன் படத்தின் முதல் டீஸரை படத்தின் முன்னணி ‘டிகாப்ரியோ’ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
#KillersOfTheFlowerMoon will exclusively be in theatres from @ParamountMovies & @AppleFilms this October. It's a project I am proud of & I cannot wait to share it with you all. @lily_gladstone @johnlithgow pic.twitter.com/kxikmq943N
— Leonardo DiCaprio (@LeoDiCaprio) May 18, 2023







