10ம் வகுப்பு ரிசல்ட் – டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்…

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதிக தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற…

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதிக தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in & www.dge.tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ள
இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில்  10ம் வகுப்பு  முடிவுகளில் டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்களின் விவரத்தை பார்க்கலாம்….

10ம் வகுப்பு தேர்ச்சி – டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:

1) பெரம்பலூர் – 97.67%

2) சிவகங்கை – 97.53%

3) விருதுநகர் – 96.22%

4) கன்னியாகுமரி – 95.99%

5) தூத்துக்குடி – 95.58%

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.