முக்கியச் செய்திகள் தமிழகம்

10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியீடு

10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளியில் பொதுதேர்வுகள் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அந்த வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது ரோல் நெம்பர், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

Jeba Arul Robinson

மதுபாட்டிலில் கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!

Ezhilarasan

“ஒலிம்பிக் சாதனைகள் இளைஞர்களை விளையாட்டின் பக்கம் உந்தித்தள்ளும்” – குடியரசுத் தலைவர்

Halley karthi