இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கொரோனா 3வது அலை உச்சத்தை தொடும்

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கொரோனா 3வது அலை உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் உலக…

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கொரோனா 3வது அலை உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் உலக வல்லரசு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தற்போது பல இடங்களில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இது அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயாராகி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.