எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு: வழக்கம் போல் சாதனை படைத்த மாணவிகள்!

10-ம் வகுப்பு முடிவு வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை…

10-ம் வகுப்பு முடிவு வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in & www.dge.tn.gov.in என்கிற
இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் ..

தேர்ச்சி விவரங்கள் : 

-தேர்ச்சி பெற்றவர்கள்: 8,35,614 (91.39%)

-மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

-மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

-மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்

கடந்த ஆண்டு மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வின் அடிப்படையில்

-தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620.

-தேர்ச்சி பெற்றோர் 8,21,994. தேர்ச்சி சதவிகிதம் 90.07%.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.