செங்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ்

செங்கம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அத்திப்பாடி பகுதியை சேர்ந்த அம்மணி அம்மாள் என்பவர் உடல் நல குறைவால் செங்கம் அரசு மருத்துவமனையில்…

செங்கம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அத்திப்பாடி பகுதியை சேர்ந்த அம்மணி அம்மாள் என்பவர் உடல் நல குறைவால் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆம்புலன்சை குயிலம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் ஓட்டிச் சென்றார் அப்போது கேட் பகுதி அருகே சென்றபோது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.

பின்னர் நீரில் இறங்கிய ஆம்புலன்சை ஜேசிபி எந்திரம் மூலம் மீட்டனர். இதில் நோயாளி உள்பட நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.