அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்! மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உறுப்பு தானம் செய்துள்ளார். இதை பாராட்டி மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் முன்னாள் முதலவர் மு.கருணாநிதியின் திட்டங்களால் பலகோடிபேர் பயணடைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் அறிமுகம் செய்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் ஏழை எளியோர் உயர்சிகிச்சை பெற்று பிழைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சேலம் திமுக நிர்வாகி குடும்பத்துடன் உடல் உறுப்பு தானம் செய்த தகவல் அறிந்து நெகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தானும் தனது மனைவியும் 2009-ஆம் ஆண்டே உடல் உறுப்பு தானம் செய்ததை நினைவுகூர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்! மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்! என்றும் கூறியுள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1666826196171243521?s=20







