100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை…

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்வு.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்.

குக்கிராமங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்.

27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும்.

திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.

நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

’சிங்கார சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும்

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.