கொரோனா மரணங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க சோனியா கோரிக்கை

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டதன் காரணமாகவே, தற்போது உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம்…

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டதன் காரணமாகவே, தற்போது உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டும் அல்லாது, நாடு முழுவதும் கொரோனா தொற்று எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்பதையும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணத்தையும் அரசாங்கங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், முதலில் இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் பின்னரே கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு செயல்பட்டதன் காரணமாகவே, கொரோனா தடுப்பூசிகளுக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.