நாடு முழுவதும், 22 நகரங்களில் கிட்டத்தட்ட 4,400 முதியவர்களிடம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 10 சதவீத முதியோர்கள் அவமதிப்பை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.
சர்வதேச முதியோர் அவமதிப்பு தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி (ஜூன் 15) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆய்வில் பங்கேற்ற முதியோர்களில் 71 சதவீத முதியோர்கள் வேலை செய்யவில்லை. 36 சதவீத முதியோர்கள் தாங்கள் வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும், அவர்களில் 40% பேர் முடிந்தவரை வேலை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இருப்பினும், போதுமான மற்றும் அணுகக்கூடிய வேலை வாய்ப்புகள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று 61 சதவீத முதியோர்கள் கருதுகின்றனர்.
தேசிய அளவில் 59 சதவீத முதியோர்கள் சமூகத்தில் அவமதிப்பை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். 10 சதவீத முதியோர்கள், 36 சதவீத உறவினர்களிடம் இருந்து அவமதிப்பை எதிர்கொள்கின்றனர். மகனிடம் இருந்து 35 சதவீத முதியோர்களும், மருமகளிடம் இருந்து 21 சதவீத முதியோர்களும் அவமதிப்பை எதிர்கொள்கின்றனர்.
புறக்கணிப்பு, வசை பாடுதல், வருவாய் இல்லாததால் அவமதிப்பை எதிர்கொள்ளல் என பல வகையில் முதியோர்கள் அவமதிப்பை எதிர்கொள்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கோகுலப் பிரியா








