33.5 C
Chennai
June 16, 2024
முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம் செய்திகள்

உலக அரசியலில் நடந்த 10 முக்கியமான Google Bombs!

கூகுளின் வருகைக்கு பிறகு உலக அரசியலில் நடந்த 10 முக்கியமான கூகுள் பாம்ப்கள் குறித்து விரிவாக காணலாம். 

1998-ல் தான் கூகுள் நிறுவனம் தொடங்கப்படுகிறது.  முன்னதாக 1996ல் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களின் ஆய்வுக்கான Thesis தான் கூகுள்.  இது பின்னர் 1998ல் பொதுவெளியில் அனைவரும் பயன்படுத்தும்படி வெளியிடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கூகுளின் தனிச் சிறப்பு என்னவெனில் அதனுடைய தேடுபொறி தான்.  அதற்கு முன்பு கொடிகட்டி பறந்து கொண்டிருந்த Yahoo நிறுவனம் கூகுளின் வருகையால் நிலைகுலைந்து காணாமல் போனது.  கூகுளின் அதிரடியான புதிய நுட்பங்கள்,  அதன் புதிய வசதிகளின் மூலம் உலக அளவில் அதிக பங்குதாரர்களை கூகுள் பெற்றது.  பயனாளர்களுக்கு கூகுள் எளிமையான ஒன்றாகவும் எளிதில் அணுகக் கூடிய ஒன்றாகவும் உள்ளது.

GOOGLE BOMB

கூகுளின் வருகைக்கு பின்னர் பலரும் அதன் தேடுபொறியைக் கண்டும்,  அதன் தரவுகளைக் கண்டும் ஆச்சர்யமடைந்தனர்.  1998ல் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் ஒரு ஆண்டிலேயே சில சச்சரவுகளையும் சந்தித்து.  1999ல் கூகுள் தேடுபொறியில் சென்று “சாத்தானை விட மோசமான ஒன்று (More evil than Satan)” என தேடினால் அதற்கான விடையாக பிரபல டெக் ஜாம்பவான் என அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதள பக்கம் தான் முதலாவது வந்து நிற்கும். இது அப்போதைய காலகட்டத்தில் பெரும் சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து இதற்கு கூகுள் பாம் (Google Bomb) எனப் பெயரிட்டனர். Google Bomb என்ற வார்த்தையை முதன்முதலில் வடிவமைத்தவர் அமெரிக்கவைச் சார்ந்த ஆடம் மேத்ஸ்தான். 2001 ஏப்ரல் 6ம் தேதி அவர் Uber.net என்கிற இணையதள இதழுக்கு எழுதிய கட்டுரையில் இந்த வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தினார். அந்த கட்டுரையில் அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது “Talentless Hack ” என்கிற வார்த்தையை அவர் கூகுளில் தேடும்போது அதற்கான பதிலாக அவரது நண்பரான ஆண்டி பிரஸ்மேனின் இணையதளத்தின் லிங்க் கிடைக்கும்படி அவர் Algorithm வடிவமைத்திருந்தார்.

கூகுள் பொதுவெளியில் இருப்பதால் அதன் Algorithm மற்றும் Keywordகளை மாற்றுவதின் வழியாகவோ, அதிகமான தேடுபொறியில் கிடைத்த தரவுகள் , விமர்சனங்களின் வாயிலாகவோ அவை உங்களுக்கான தேடலின் விடையாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஜானி என்கிற பிரபலமாக அறியப்பட்ட ஒரு நபரை பலரும் “நாய்” என விமர்சனம் செய்திருந்தாலோ, எழுதியிருந்தாலோ அதனை Keyword ஆக கூகுள் Algorithm எடுத்துக் கொள்ளும். இதனைத் தொடர்ந்து நீங்கள் நாய் என கூகுளில் தேடினால் நாய்களின் படங்களோடு சேர்த்து ஜானியின் படமும் இடம்பெறும்.

உலக அரசியலில் நடந்த 10 முக்கிய Google Bombing குறித்து விரிவாக காணலாம்

Miserable Failure – ஜார்ஜ் டபில்யூ புஷ் :

2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்.  அப்போது தான் கூகுள் பொதுப் பயன்பாட்டிற்கு வந்திருந்த நேரம்.  அப்போது கூகுளில் சென்று பெண்களை குறித்து இழிவாக சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தையை தேடினால் (*******************) அதன் முதல் பதிலாக அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ்  புஷ்ஷின் படமும் அவரின் இணையதளமும் வந்துவிடும்.  இது அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையானது.  இதுதான் உலக அரசியலில் நடைபெற்ற முதல் Misinformation ஆகும்.

இதேபோல 2004க்கு பிறகு கூகுள் தேடலில் “Miserable Failure” என தேடினால் அதற்கு முதல் பதிலாக ஜார்ஜ் புஷ்ஷின் படம் தான் வரும்.  அமெரிக்கா ஈராக்கில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நேரம் என்பதால் புஷ்ஷுக்கு எதிராக இணையதளங்களில் பலரும் எழுதி வந்த நிலையில் அதன் அல்காரிதம் மற்றும் Keyword அடிப்படையில் புஷ்ஷின் படம் வந்தது.  இதனைத் தொடர்ந்துதான் கூகுள் பாம்பிங் என்கிற சொல்லாடல் பிரபலமானது.

Buffone – சில்வியோ பெர்லுஸ்கோனி :

சில்வியோ பெர்லுஸ்கோனி இத்தாலியின் முன்னாள்பிரதமராவர்.  இவர் 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில்  மூன்று முறை இத்தாலியின் பிரதமராக இருந்துள்ளார். கடந்த 2006 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் Buffon என்கிற வார்த்தையை கூகுளில் தேடினால் அது நேரடியாக இத்தாலிப் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனியின் படம் மற்றும் இணையதளத்தை காட்டும்.  1994 ஆம் ஆண்டு சில்வியோ பெர்லுஸ்கோனி பதவியேற்கும்போது Buffon என்கிற சொல்லாடலை குறித்து அவரை பலர் விமர்சனம் செய்துள்ளனர்.  இது கிட்டத்தட்ட  12 வருடங்கள் கழித்து அவருக்கு எதிராக கூகுள் பாம்பிங்காக திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

”Waffels”  – ஜான் கெர்ரி

2004 ஆம் ஆண்டில்,  டுகுஸ்னே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட மாணவரான கென் ஜேக்கப்சன் என்பவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கெர்ரியை ‘Waffels” என்கிற சொல்லாடலுடன் Keywordஐ இணைத்து Google Bombing ஐ உருவாக்கினார் என சொல்லப்படுகிறது.  2004ம் ஆண்டில்  ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷு மீது ஜனநாயகக் கட்சியினர் நிகழ்த்திய Google Bombing-கிற்கான பதில் இது என்று கூறப்பபட்டது.  Waffels என்பதற்கு தீர்க்கமாக முடிவு எடுக்க முடியாமல் ஒருவரை சார்ந்திருத்தல் என்பதனை குறிக்க இந்த  சொல் பயன்படுத்தப்படுகிறது.

Santorum – ரிக் சாண்டோரம்

மே 2003ல்,  அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரிக் சாண்டோரம் தன் பாலின ஈர்ப்பு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி வந்தார்.  இவருக்கு எதிராக கட்டுரையாளர் மற்றும் LGBT உரிமைகள் ஆர்வலரான டான் சாவேஜ்  பிரச்சாரங்களை முன்வைத்தார்.  இதனைத் தொடர்ந்து தன்பாலின ஈர்ப்ப்பை குறிக்கும்  வார்த்தையான Homo Sex எனும் வார்த்தையை கூகுளில் தேடினால் அது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரிக் சாண்டோரமின் பக்கம் அல்லது படங்களைக் காட்டும் வகையில் Google Bombing செய்யப்பட்டது.

Failure – பாரக் ஒபாமா

2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக பரப்பபட்ட முக்கியமான Google Bombing ன் சொல்லாடலான Miserable Failureல் உள்ள Failure என்கிற வார்த்தை அடுத்ததாக பிரதமரான பாரக் ஒபாமாவிற்கும் தொடர்ந்தது.  அப்போது கூகுளில் சென்று Failure என தேடினால் அதன் பதில்களாக வெள்ளை மாளிகை மற்றும் பாரக் ஒபாமாவின் படங்கள் கிடைக்கும்படி செய்யப்பட்டிருந்தது.  ஒபாமா பதவியேற்ற பின் சில ஹேக்கர்கள்  முன்னதாக ஜார்ஜ் புஷ்ஷின் Google Bombing இணைப்புகள் அனைத்தையும் ஒபாமாவின் பெயருக்கு திருப்பிவிட்டனர்.  இதனால் Google Bombing பட்டியலில் ஒபாமாவும் இணைந்தார்.

“trou du cul” – நிக்கோலஸ் சர்கோஸி

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி கடந்த 2009 ஆம் ஆண்டில் Google Bombing-க்கு உள்ளானார்.  “trou du cul” என்ற  பிரெஞ்சு வார்த்தையை கூகுளில் தேடினால் அது உடனடியாக பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்படி செய்யப்பட்டிருந்தது. பிரெஞ்சில் “trou du cul” என்கிற வார்த்தை கெட்ட வார்த்தையை குறிக்கும்.

‘Plagiator’ – விக்டர் போண்டா

கடந்த ஜூலை 2012 ‘ஏமாற்றுபவர்’ என்பதன் ருமேனிய வார்த்தையான ‘Plagiator’  தேடினால் அது அப்போதைய ருமேனிய பிரதமராக இருந்த  விக்டர் போன்டாவின் படங்கள் மற்றும் இணையதளத்தை குறித்தது.  ருமேனிய அதிபரான விக்டர் போன்டா தனது முனைவர் பட்ட ஆய்விற்கான Thesisஐ வேறொரு நபரிடம் இருந்து திருடியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விக்டர் போண்டா மீது இந்த Google Bombing செய்யப்பட்டது

 ‘Completely Wrong ‘ – மிட் ரோம்னி

அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னி, ‘Completely Wrong’ என்ற தேடல் விளைவாக Google Bombக்கு இரையானார்.  அக்டோபர் மாதத்தில் ஒரு வலைப்பதிவிற்கு மிட் ரோம்னி தெரிவித்த சில அரசியல் கருத்துகளின் விளைவாக இந்த Google Bombing உருவானது. அதில் 47 சதவீத அமெரிக்கர்கள் “பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற ரீதியில் அரசியல் கருத்துக்களை அவர் தெரிவித்ததை மறுக்கும் விதமாக Completely Wrong – முற்றிலும் தவறானது என்கிற சொல்லாடல் பிரபலமானது. இந்த சொல்லாடல்  பல்வேறு செய்தி அறிக்கைகளிலிருந்து வெளியிடப்பட்டிருந்ததால் கூகுளின் அல்காரிதம்கள் அதனை எடுத்துக் கொண்டு Google Bombingல் வெளிப்படுத்தியது.

இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான Google Bombing

கடந்த ஜூன் 2015 இல், ‘டாப் 10 குற்றவாளிகள்’ என கூகுளில் தேடினால் ,  முக்கியமான தீவிரவாதிகள்,  பயங்கரவாதிகள்,  சர்வாதிகாரிகள் இவர்களுடன் சேர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மற்றும் படம் ஆகியவற்றை கூகுள் தேடுபொறி காண்பித்தது. 2002 நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து அவரை கண்டித்து பலரும் இணையத்தில் எழுதியிருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக 2015ம் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்த சொற்றொடர் பிரபலமாகி Google Bombingல் இணைந்து கொண்டது.

Idiot – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கடந்த ஜூலை 2018ல் Google Bombing வெளிப்பட்டது.  idiot என கூகுளில் தேடினால் அதற்கான தேடலில் ட்ரம்பின் படங்களைக் காட்டும் விதமாக கூகுள் பாம் செய்யப்பட்டது.  கூகுளின் செயல்பாடுகள் குறித்து நீதித்துறைக் குழு விசாரணைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

-அகமது AQ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading