விவசாயிகள் மற்றும் ஏழைகளை பாதுகாப்பதற்காக, இந்த அரசு வீழ்ந்தே தீரும்; கமல்ஹாசன் கருத்து!

விவசாயிகள் மற்றும் ஏழைகளை பாதுகாப்பதற்காக, இந்த அரசு வீழ்ந்தே தீரும் என தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது…

விவசாயிகள் மற்றும் ஏழைகளை பாதுகாப்பதற்காக, இந்த அரசு வீழ்ந்தே தீரும் என தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன் என கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பல புதிய மக்களுக்கான திட்டங்களுடன் நாங்கள் சிறு நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். அதனை வீரநடையாக மாற்றுவது நீங்கள்தான். எங்களது அரசியல் பழி போடும் அரசியல் அல்ல பழிவாங்கும் அரசியல் அல்ல வழிகாட்டும் அரசியல். விவசாயிகளை நெசவாளர்களை ஏழைகளை பாதுகாக்க அரசு வீழ்ந்தே தீரும். அதனை வீழ்த்தும் கருவியாக எங்களை பயன் படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply