விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டனர்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன்…

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார்.

தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதாக கூறினார். வேளாண்மை சட்டங்களில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

எப்போதுமே விவசாயிகள் கை ஓங்கி இருப்பதை வேளாண் சட்டம் உறுதி செய்வதாக தெரிவித்த அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகள் அழைப்பு விடுத்த வேலை நிறுத்தத்துக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் போராட்டத்தைப் பார்க்கும்போது, மாவோயிஸ்ட்கள், இடது சாரி இயக்கங்கள் ஊடுருவி விட்டனர் என்று தெரிகிறது என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply