நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!

கேரளாவில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் -தெங்காமநாடு செல்லும் சாலையில் காரின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் காரை…

கேரளாவில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் -தெங்காமநாடு செல்லும் சாலையில் காரின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் காரை வேகமாக இயக்கிய சிறிது நேரத்தில் நாய் கீழே விழுந்து சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்படுகிறது. இதனை அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பார்த்து தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் கார் ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைதொடர்ந்து ஓட்டுநர், நாயின் மீது கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து விட்டு வேகமாக சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் உரிமையாளரும், ஓட்டுநருமான யூசுப் மீது விலங்குகளை கொலை செய்ய முயற்சி செய்வது, துன்புறுத்துவது அல்லது பயனற்றதாக ஆக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply