கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்துள்ள BioNTech நிறுவனத்தின் பங்குகள் 250% உயர்வு பெற்றதையடுத்து
ஃபுளூம்பெர்க்கின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார் BioNTech நிறுவனத்தின் இணை நிறுவனர் Ugur Sahin.
Pfizer – BioNTech நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன்னர் தான் அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் கொரொனா தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளித்த முதல் நாடு என்ற பெருமையையும் அந்நாடு பெற்றது.
இதனை தொடர்ந்து BioNTech நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 250% உயர்ந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் BioNTech நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்மனியின் Ugur Sahin உலகின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார். அவர் புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 493வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. Ugur Sahin-ன் சொத்து மதிப்பு தற்போது 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தகுந்தது.







