வரும் சட்டப்பேரவைத் தேர்தலுடன் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுடன் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார், என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே குருமலை கிராமத்தில், அம்மா மினி கிளினிக் திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுடன் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார், என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே குருமலை கிராமத்தில், அம்மா மினி கிளினிக் திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்பட கதாநாயகன் போல நினைத்துக் கொண்டு கமல்ஹாசன் அரசியல் செய்வதாகக் கூறினார். வரும் தேர்தலோடு கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய்விடுவார், என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார். அதிமுக ஆட்சி மீது சட்டப்பேரவையில், மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்ததாகக் கூறிய அவர், ஒன்றைக் கூட ஆதாரப்பூர்வமாக அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியிட்டாலும், சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply