அடுத்த ஆண்டு முதல் ரெனால்ட் கார் மாடல்களின் விலை உயர்வு!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விலை 28,000 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்றாக ரெனால்ட் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின்…

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விலை 28,000 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்றாக ரெனால்ட் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் க்விட், ட்ஸ்டர், ட்ரைபர் உள்ளிட்ட மாடல் கார்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக வரும் ஜனவரி முதல் ரெனால்ட் கார் மாடல்களில் விலை 28,000 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விலை அதிகரிப்பு என்பது ஸ்பெக்ட்ரம் முழுவதும் உள்ளீட்டு செலவுகள் சீராக அதிகரித்து வருவதன் விளைவாகும், இதில் எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் விலை உயர்வு மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply