ரோஸ்கர் மேளா திட்டத்தில் 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசின் பணி நியமன ஆணை வழங்கும் “ரோஸ்கர் மேளா” திட்டம் 5-வது கட்டமாக நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று நடைபெற்றது. ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் சென்னையில் 247 பேருக்கு மத்திய…

மத்திய அரசின் பணி நியமன ஆணை வழங்கும் “ரோஸ்கர் மேளா” திட்டம் 5-வது கட்டமாக நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று நடைபெற்றது. ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் சென்னையில் 247 பேருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற புதிதாக தேர்வாகியுள்ள 71,000
பணியாளர்களுக்கு ரோஸ்கர் மேளா திட்டம் மூலம் நாடு முழுவதும் 45 இடங்களில் பணி
நியமன ஆணைகள் வழங்கப்பட்டன, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன்
பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுவரை, பிரதமர் மோடி 2.9 லட்சம்
நபர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார். இன்று 5 ஆவது முறையாக இந்த பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் தபால் துறை சார்பில்
ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கலந்து கொண்டு, 247 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

சென்னையை பொறுத்தவரை தபால் துறையில் 158 பேர், ரயில்வேயில் 60 பேர் ,
கல்வித்துறையில் 15 பேர், பாதுகாப்பு துறையில் 5 பேர், பெட்ரோலியம் மற்றும்
இயற்க்கைவாயு அமைச்சகத்தில் 8 பேர் , மருத்துவம் மற்றும் குடும்ப நல
அமைச்சகத்தில் ஒருவர் என மொத்தம் 247 பேர் பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டனர்.

பணி நியமனம் பெற்றவர்கள் ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் பணி நியமனம்
கிடைத்துள்ளது இது எங்களது வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும்
இந்த பணி கிடைத்ததற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது, மேலும் அவர்களைப் பார்த்தது ஒரு உற்சாகத்தையும் ஊக்கத்தையும்
அளித்துள்ளது என்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக நிர்மலா சீதாராமன் பணிக்கு தேர்வானவர்களிடம் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.