ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 82 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. “பாக்சிங் டே டெஸ்ட்” என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்பு விளையாடிய இந்திய அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் நிதானத்துடன் விளையாடி வந்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரஹானே டெஸ்ட் போட்டியில் தனது 12வது சதத்தை பதிவு செய்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்துள்ளது. இது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா பெற்றதைவிட 82 ரன்கள் கூடுதல் ஆகும். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், கேப்டன் ரஹானே 102 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர்.







