தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பிரச்சார தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில், சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ள, 3 நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். வரும் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவை வரும் ராகுல் காந்தி, சிறுகுறு தொழில்துறையினரை சந்திக்கிறார். தொடர்ந்து அவினாசி, அனுப்பம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பேரணியிலும், திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். 24-ஆம் தேதி ஊத்துகுளி, பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளும் ராகுல்காந்தி, தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அதனை தொடர்ந்து 25-ஆம் தேதி கரூரில் 2 இடங்களில் பேரணியும், திண்டுக்கல்லில் பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.







