கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அமைச்சர் காமராஜின் உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.







