இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா அறிவித்துள்ளார். மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டு நெறிமுறையும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் அதிகம் வரும் சுற்றுலா தலங்களில் மேகாலயாவும் ஒன்று. ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







