கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் (Optical Fibre Cable) பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் (Optical Fibre Cable) பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், பித்ரா, சேத்லாத், கில்தான், கடமாட் ஆகியவைகளுக்கும் இடையே கடலுக்கடியில் கண்ணாடி இழை வடம் மூலம் நேரடி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கு ரூ.1,072 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. யுனிவர்சல் சர்வீஸ் ஆப்லிகேஷன் என்னும் நிதியத்தால் இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அரசு சேவைகளை வழங்குவதற்கும், சுற்றுலா, கல்வி, தொழில்கள், இதர துறைகளின் மேம்பாட்டுக்கும் இந்தத் திட்டம் பெரும் பங்காற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக பிஎஸ்என்எல்-லும், தொழில்நுட்ப ஆலோசகராக டிசிஐஎல்-லும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply