மியான்மரில் பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் துறவி!

மியான்மரில் வசிக்கும் துறவி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் இடங்கள் பக்கம் வந்து விடுகின்றன. இதில் பெரும்பாலான விலங்குகளை வனத்துறையினர்…

மியான்மரில் வசிக்கும் துறவி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.

காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் இடங்கள் பக்கம் வந்து விடுகின்றன. இதில் பெரும்பாலான விலங்குகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு விடுகின்றனர். ஆனால் பாம்பு உள்ளிட்ட சில உயிரினங்களை மக்கள் அச்சத்தில் அடித்து கொன்று விடுகின்றனர்.

அதனால் அவைகளை பாதுகாக்கும் விதமாக மியான்மரில் உள்ள 69 வயது துறவி ஒருவர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். சாலைகளில் தென்படும் பாம்பு முதல் வீடுகளுக்குள் புகுந்த பாம்பு வரை அனைத்தும் இறுதியில் இவரது ஆசிரமத்திற்கு தான் வருகின்றன. ஒரு சிலர் பிடிபடும் பாம்புகளை வெளியே அதிக விலைக்கு விற்பதை தடுக்கவும் இந்த முயற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எங்கு பாம்பு பிடிபட்டாலும் உடனடியாக அவர் இருக்கும் இடத்தை தேடியே மக்கள் வருகின்றனர். அரசாங்கமும் இவரையே நம்பி வருவதாக கூறப்படுகிறது. இவர் சில நாட்களுக்கு பிறகு இந்த பாம்புகளை காடுகளுக்குள் சுதந்திரமாக விட்டுச் செல்கிறார்.

உலகளவில் வனவிலங்குகளை சட்டவிரோதமாக வியாபாரம் செய்யும் நாடுகளில் மியான்மர் முக்கிய இடத்தில் உள்ளது. பெரும்பாலும் இவை சீனா, தாய்லாந்து நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply