மாஸ்க் அணியாத காவலர்கள்: பொதுமக்கள் அதிருப்தி

பொதுமக்கள் மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்களே மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்டு வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணியவும், சமூக இடை வெளியை…

பொதுமக்கள் மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்களே மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்டு வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணியவும், சமூக இடை வெளியை பின்பற்றவும் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நடக்கும் போராட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போலீசார் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டமாக நிற்பதும் மற்றும் மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபடுவது போன்றவை அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply