மழைபாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிக்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்வதற்கான மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வாகனங்களை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைபாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிக்காக 52 மருத்துவ குழுக்களும், கொசு ஒழிப்பு புகை தெளிப்பான்கள், குளோரிநேஷன் குழுக்கள், கொரோனா மாதிரி சேகரிப்பு குழுக்கள் என 240 குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது, இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு பதிவாகவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.







