இந்தியா சீனா இடையே ஏற்கனவே எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தின் பம் லா பாஸ் பகுதியில் சீனா புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ளது.
லடாக்கின் காரகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய – சீனா எல்லைப் பகுதி அமைந்துள்ளன. அருணாச்சலப்பிரதேசத்தையும் பூட்டானில் சில பகுதிகளையும் உரிமைகொண்டாடி வரும் சீனா. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் போர்ப் பதற்றம் எழுந்தது. இதனிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஏபரல் மாதம் இந்திய சீன எல்லை பிராந்தியமான லடாக்கில் உள்ள இந்திய பகுதியான பாங்காங் ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனை அடுத்து இரு நாட்டுப்படைகளுக்கு ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே சமீபகாலமாக சீனா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் வகையில் அதன் எல்லைப்பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பதும், ஆயுத பதுங்கு குழிகளை அமைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா சீனா மற்றும் பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் பம் லா பாஸ் பகுதியில் சீனா புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ளது செயற்கைக்கோள் வரைபடம் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, செயற்கைக்கோள் படங்கள், பிளானட் லேப்ஸிலிருந்து பெறப்பட்டவை, கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி இப்பகுதியில் ஒரு கிராமம் கட்டப்பட்டிருப்பதைக் வரைபடம் காட்டுகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் உள்ளன, அவை சாலட்டுகள் என்று கருதப்படுகின்றன, இதேபோல் கடந்த நவம்பர் 28, 2020 தேதி அன்று எடுக்கப்பட்ட இரண்டாவது படத்தின் படி, குறைந்தது 50 கட்டமைப்புகளைக் கொண்ட மூன்று கூடுதல் இடங்கள் இருப்பதை காட்டுகிறது.








